வாழ்க்கை மொத்தமும் கடல் கடலிலேயே மூழ்கி விட்டது பொதுவாக மாலுமிகள் ஒரு வார்த்தை சொல்வார்கள் கடல் தண்ணீர் குடித்தவன் திரும்பவும் கடலுக்குத்தான் செல்வான் என்று

அது ஒருவித நரக வலி உள்ள இடம் கை நிறைய பணம் கைவசம் என்றாலும் எப்போ நம்முடைய காண்ட்ராக்ட் முடியும் மனைவி குழந்தையை போயி பார்க்கலாம் என தினம் தினம் தவிப்பான வாழ்க்கைதான் நிறைய நாடுகள் போயி பார்க்கலாம் சுற்றலாம் வரலாம் ஆனால் அதில் அந்த நேரம் ஒரு ஆனந்தம் மனதோடு இருக்கலாம் தவிர திரும்பவும் கப்பல் திரும்பினால் போதும் என்றுதான் இருக்கும்

நேருக்கு நேர் அதிக இந்தியர்களை அயல்நாட்டில் அதுவும் தமிழ் நண்பர்களை சந்திக்கும் போது கொஞ்சம் பெருமிதம் கொள்வதுண்டு
அதேநேரம் நம் கப்பலில் கொஞ்சம் அதிகமாக தமிழர்கள் சேரும்போதும் அங்கே அரசியல் நெடி அடிக்க ஆரம்பித்துவிடும்
எதுவாயினும் எல்லா நரகவேதனையிலும் நம்மால் கைநிறைய சம்பாதிக்க முடியுதே எனும்போது கொஞ்சம் நகத்தை கடித்துக்கொள்ள சொல்லும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை!

Comments

Popular Posts