நங்கூரம் கடலில் பாய்ச்சுவது பற்றி தெரிந்து கொள்வோம்
நங்கூரம் கடலில் பாய்ச்சுவது என்பது எவ்வளவு முக்கியமானது, எவ்வளவு சிக்கலானது என்பது ஒவ்வொரு அதிகாரிக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
ஜூனியர் அதிகாரியாக போகும் நாம் கப்பலில் மேல் தளத்தில் நங்கூரம் இடும் நேரம் காப்டனோடு இருக்கும் சூழல் அவ்வப்போது உருவாகும் இந்த நேரங்களில் காப்டன் கையாளும் சின்ன சின்ன உத்திகளை கூர்ந்து கவனிப்பது பெரிய பலனை தரும்.சில காப்டன்கள் இது போல நேரங்களில் ஜூனியர்கள் ஒழுங்காக கவனம் செலுத்துகிறார்களா என்பதை கூர்ந்து கவனித்து கொண்டு பின்னர் அவர்களை கேள்விகள் கேட்டு பரீட்சார்த்தம் செய்வார்கள்.
நங்கூரத்தின் இழுக்கும் திறன் எவ்வளவு?
நங்கூரம் இட்ட பின்னர் இழுக்கும் சக்தி திறனானது 100 சதமானதாக இருக்க வேண்டும்.
இது கிடை மட்டமாக தண்ணீரின் தரை மட்டத்தில் நீளமாக நின்று இழுக்க வேண்டும்.
நங்கூர செயினானது தரையை விட்டு நின்று தூக்கி வரும் நேரம் செயினின் சக்தி திறன் குறைய ஆரம்பிக்கும்.
இது நங்கூரத்தின் கொக்கியின் தன்மையை, மற்றும் கடல் மாற்றங்கள் பொறுத்து மாறுபடலாம்
தண்ணீரின் தரை மட்டத்தை எவ்வாறு அறிந்து கொள்வது?
கடினமான மண் பகுதியை விட களிமண் மற்றும் கடல் மண் போன்றவை பரிசீலிக்கப்பட வேண்டியவை
நங்கூரம் இடும் இடமானது அடியில் பைப்லைன் மற்றும் கேபிள்கள் இல்லாத இடமாக பார்த்த்துக்கொள்ள வேண்டும்
முக்கியமாக முறையாக அங்கீகாரம் கரையோர நிலையங்களில் பெறப்பெற்று அல்லது பாதுகாப்பான அங்கீகாரம் உள்ள கரையோரங்களில் மட்டுமே நங்கூரம் இடுவது சாத்தியம்
கப்பல் நங்கூரம் இடும் இடங்களில் அருகாமையில் உள்ள கப்பல்களை விட்டு சுற்றி வரும் அளவுக்கு தூரமாக பிளான் செய்ய வேண்டும்
நங்கூரம் இட போகும் இடத்தை குறிப்பு எடுத்துக்கொள்வது கவனத்தில் கொள்ளல் வேண்டும் முக்கியமாக கரையோர பகுதிகளில் குறிப்பு வைத்துக்கொள்வது அவசியம்
50 மீட்டர் குறைவான கடல் பகுதியை தேர்வு செய்ய வேண்டும் அதிகமாக கடல் நீர் மட்டத்தில் நங்கூரம் இடும்போது கப்பலின் சுத்தும் அளவும் கூடலாம்.
எவ்வளவு செயின் அளவு நாம் தண்ணீரில் விடுவது?
கடல் தரை மட்ட நிலையை பொறுத்தது, தரையில் களிமண் சார்ந்து இருக்குமானால் குறைவாக செயின் (கேபிள்)விடலாம்,அதே போல் மண் சார்ந்த தரையானால் நீளமாக விடுவது அவசியமாகும்.
மேலும் பாதுகாப்பான கரையோரம் என்றால் நீளம் குறைவாகவும்,
காற்றின் வீரியம் அதிகமாயும்,கடலின் சீற்றம் அதிகமாயும் இருப்பின் நீளம் கூடவும் இருப்பது நல்லதே.
இன்னும் கால அளவு முக்கியம் மிக நீண்ட நாட்கள் தங்கி இருக்க வேண்டி இருப்பின் நீளம் கூட்டப்பபடலாம்.
மேலும் நங்கூரம் இடும் கடலின் ஆழம் மற்றும் கப்பல் ஏற்றி வந்துள்ள சரக்கின் எடையை பொருத்தும் கூட்டலாம்.
நங்கூரம் இடும் இடும் முன்னர் எதையெல்லாம் கவனிப்பது?
காற்றுக்கு எதிர் திசையிலும் நீரோட்டத்தின் எதிர் திசையிலும் கப்பலை நிலை நிறுத்துவது அவசியம் இது அருகாமையில் நங்கூரம் இட்டு இருக்கும் மற்ற கப்பல்களை கவனித்தால் தெரிந்துகொள்ளலாம்
கப்பலின் எந்திர ஓட்டத்தை கப்பல் நங்கூரம் இடத்திற்கு வரும் முன்னர் அதை அறிந்து கட்டுக்குள் வைத்து கொள்வது அவசியம் இதற்கு பின்னோக்கிய இயந்திர அணுகுமுறையும் தேவை படலாம்
நங்கூரம் இட்ட பிறகு வரை படத்தில் குறிப்பு எடுத்து வைத்து கப்பல் சுற்றும் வளைவுகளையும் குறித்து வைத்து கொள்வது நல்லது.
நங்கூரம் பொதுவாகவே கடல் ஆழத்தில் இரு மடங்கு செலுத்தியவுடனே நின்று இழுக்க ஆரம்பிக்கும்
நங்கூரம் மண்ணில் பிடித்துகொண்டது அறிந்தவுடனேயே நீர் ஆழத்தில் இரு மடங்குக்கும் குறைவாக செயினை வேகமாக செலுத்துதல் அவசியமாகும்
ஒவ்வொரு கப்பலின் விண்ட்லாசின் தூக்கும் சக்தி திறன் என்பது நங்கூர செயின் இட்டபின்னர் மூன்று கேபிள் செங்குத்தாக தொங்கும்போது தூக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும்
இனி நங்கூரம் பாய்ச்சுவது எவ்வாறு?
காற்றுக்கும் நீரோட்டத்திற்கும் எதிர் திசையில் நிறுத்தி வேகம் குறைத்துக்கொள்ள வேண்டும்
நங்கூரத்தை ஹாஸ் பைப் (அதாவது நங்கூர பல்லுக்கு வெளியே உள்ள பகுதியில்) நங்கூரத்தை தண்ணீர் மட்டம் வரை இறக்கி தங்க வைத்து காப்டனின் அறிவுரையின் பேரில் விண்ட்லாசில் வைக்கவோ,அல்லது பிரேக்கில் வைத்தோ இருக்க வேண்டும்
நங்கூரம் போடும் இடம் வந்தவுடன் கப்பலை பின்னோக்கி செலுத்தி கப்பலின் எந்திர ஓட்ட அளவை 0 பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டும்
கப்பலின் பின் பகுதி புரோப்பல்லர் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் ஸ்டியரிங் ஆனது 0 திசையில் இருப்பதும் நல்லது.
எப்போது பிரேக்கில் நங்கூரத்தை விடுவது அல்லது விண்ட்லாசின் உதவியுடன் விடுவது?
கடலின் ஆழம் 20 மீட்டர் இருக்கும் பட்சத்தில் லெட் கோ செய்யலாம்(அதாவது பிரேக்கை திறந்து விட்டு பிடிக்கலாம்)
கடலின் ஆழம் 50 மீட்டர் அதிகமாக இருக்கும்போது வாக் பேக்(அதாவது விண்ட்லாசின் உதவி கொண்டே நங்கூரத்தை கடைசி வரையில் செலுத்துதல்)செய்து நிலை நிறுத்துவது நல்லது.
நங்கூரம் சரியாக பிடித்துள்ளது(பிராட் அப்) என்பதை எவ்வாறு அறிவது?
முதலில் கப்பல் சுற்றி வந்து நிலையான திசையில் முன்னோக்கி நிற்பது
அடுத்து கப்பல் பின்னோக்கி நகர்ந்து செயின் இழுவையானது நீண்டு கொண்டே போவது (லாங் ஸ்டே)
அடுத்து செயினின் கணம் இழுவையானது குறைந்து (மீடியம் ஸ்டே)போவது
அடுத்து (ஷார்ட் ஸ்டே)சிறிய நீளம் காட்டும் இனி செயினானது இந்த அளவுக்குள் நீண்டு குறைந்து செங்குத்தாகவோ காட்சி அளிக்கும் பட்சத்தில் நங்கூரம் பிராட் அப் நிலையை அடைந்தது எனலாம்.
நங்கூர செயினானது நிலை கொள்ளாமல் இழுத்து கொண்டே செல்வதை எவ்வாறு தெரிந்து கொள்வது?
நங்கூர செயின் எப்போதும் லாங் ஸ்டே வாகவே காணப்படுகிறது என்றால் கப்பல் வெகு வேகமாக இழுத்து செல்கிறது எனலாம்.
செயின் நீளமாகவும் அடுத்து மீடியமாகவும் இழுத்து கொண்டு ஜெர்க் அடித்தால் கப்பல் மெதுவாக இழுத்துக்கொண்டு செல்கிறது எனலாம்
ஜீபிஎஸ் நிலையை ஊர்ஜிதப்படுத்துவது
கரையோர தடயங்களை விட்டு கப்பல் தூரமாகி இருக்கிறதா என்று தெளிவு படுத்துவது
நங்கூரம் இடபோகும் முன்னர் சில காப்டன்கள் தெளிவாக எல்லோரிடமும் செயல் முறை விளக்கமும், 0 எதிர்மறை சம்பவங்களும் இருக்கவேண்டும் என்ற கட்டளைகளும் தருவதுண்டு.ஒரே அதிகாரிகள்,ஊழியர்கள் தொடர்ச்சியாக அழகாக செய்து வரும் பட்சத்தில் நேரடியாக நங்கூர நிலையம் முன்னேறிவிடுவதுண்டு எல்லோரும்.
இவ்வாறு நங்கூரம் இடும் முறையானது காலம் காலமாக நடைமுறையில் இருந்தாலும் சில பழக்கங்கள் சட்ட திருத்தங்கள் மாறாமலும் இல்லை.இது சமீப காலமாக நடக்கும் மோசமான எதிர்மறை சம்பவங்களால் இந்த அணுகு முறை மாறுகிறது.
என்னுடைய பதிவுகளை முகநூலில் பின் தொடரலாம்
https://www.facebook.com/kappal123








Comments
Post a Comment