கப்பல் துறைமுகத்திற்குள் எவ்வாறு நுழைகிறது?

கப்பலானது பெருங்கடலிலிருந்து கரையை எட்டும் முன்னர் இயந்திரத்தை இயந்திர அறையில் இருந்து இயக்கும் ஆணையை கரை எட்டும் முன்னர் மாற்றியமைத்து மேலிருந்தும் இயக்கி கொள்ள அனுமதியும் ஆணையும் கேட்டு வாங்கி கொள்ளப்படும்

பொதுவாக கப்பல் அந்தந்த நாட்டின் கரையோர கடல் நீரை எட்டியதும் அதிகப்படியான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கும் உள்ளிருந்து வெளியே வரலாம்,வெளியே இருந்து உள்ளே போகலாம் ஓவர்டேக் செய்யலாம் இந்த மேனோவெரிங்க் என்ற நிலை கட்டுப்பாட்டை எல்லா கப்பல்களும் இதே பாணியில் சந்திக்க நேரிடும்

இது வெறும் துறைமுகம் சார்ந்த கடல் மட்டுமல்லாது பெரிய கால்வாய்,மற்றும் சில முக்கியக்கடல்களிலும் இந்த மேனோவெரிங்க் கடைபிடிக்கப்படும் சம்யங்களில் பலமணி நேரம் அல்லது பல நாட்கள் கூட நீடிக்கலாம் இந்த நேரங்களில் கூடுதலாக கண்காணிப்புகள் அவசியப்படுகிறது இயந்திர அறையின் UMS (unmanned system)என்ற ஆளில்லாமல் செல்லக்கூடிய இயந்திர அறை, ஆட்கள் முழுநேர பணியில் அமர்த்தப்பட்டு இயந்திரத்தின் முழு மொத்த கட்டுப்பாட்டையும் மேலிருந்து எடுப்பது,கண்காணிப்பது.

பெரும்பாலான நேரெதிர் விபத்துக்கள்,கப்பல் தரை தட்டும் நிகழ்வுகள் எல்லாம் இந்த மேனோவெரிங்க் நிகழ்வின்போது மட்டுமே நடக்கிறது இந்த தருணங்கள் கப்பலின் வெகு முக்கியமான நேரமாக கருதப்படுகிறது  இதுதான் கடலோடிக்கும்,கப்பலுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்காலமாக கருதப்படுகிறது.
பல கப்பல் அதிகாரிகள் காப்டன் இல்லாத ராத்திரி வேளைகளில் குறுகிய கால்வாய் என்றாலும் கூட கூடவே அருகாமையில் வரக்கூடிய கப்பல்களை எல்லாம் முண்டியடிக்க அதிக இயந்திர வேகத்தை கூட்டி முன்னேறுவதுண்டு.
ஆனால், இங்கே சட்டம் தவறாக போய் அருகருகாமையில் மத்த கப்பலோடு ஒன்றோடொன்று உரசி மோதி பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.இது ஒரு பெரிய அலட்சிய போக்கு என்னை யார் கேட்க முடியும் என்ற தெனாவட்டு,அதிகார திமிர்.இப்படியும் பல்வேறு வடஇந்திய அதிகாரிகள் இருப்பதுண்டு.கடைசியில் என்ன ஆகும்?                எல்லா நிறுவனத்துக்கும் அவரின் சேஷ்டை சிருங்காரம் எல்லாம் தெரியப்படுத்தப்படும்.எந்த நிறுவனமும் தைரியமாக இவருக்கு வேலையும் கொடுக்க முன் வராது. 
முந்தைய காலங்கள் போலல்லாமல் இப்போதெல்லாம் VDR மூலம் நடக்கும் சம்பவங்கள் பதிவேற்றம் செய்யப்படும் அது நிறுவனத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அந்த ரெக்கார்டையும் வேறு நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.

எனவே வேகமாக முன்னேறி போய்விட்டால் காலையில் காப்டன் வந்து எந்த அவார்டும் கொடுக்கப்போவதில்லை.எனவே எல்லா செயல்களையும் உணர்ந்து நேர்மையுடன் மரியாதையுடன் சட்டத்திற்கு உட்பட்டு கப்பலை கொண்டு போக வேண்டும்.
22 உயிர்கள் உள்ளே உறங்கி கொண்டு இருக்கிறார்கள்.நம்மை நம்பி பல கோடிகள் பெருமானமுள்ள உடமையை தந்திருக்கிறார்கள் அதை நாம் பொறுப்பாக கொண்டு போக வேண்டும் என்ற எண்ணங்களை ஒருபோதும் மனதை விட்டு நீங்காதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்              

இந்த பொறுப்புகள் என்பது இப்போது உள்ள ஜூனியர்கள் மத்தியில் குறைந்தே காணப்படுகிறது என்றே சொல்லலாம். நிறுவனங்களும் குறைந்த சம்பளம் கொடுக்கும் ஆசையில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய தவறி விடுகிறார்கள்  .    

இனி, துறைமுகம் உள் நுழையும் முன்பாக பைலட் நிலையத்துக்கு  அழைப்பதுண்டு.உள்ளூர் பைலட் என்பவர் அந்த துறைமுக கடலோர நீர் மட்டங்களையும்,சமிக்ஞை மிதவைகளையும் அடையாளம் காணக்கூடியவராகவும், துறைமுகத்தில் கப்பலை சுமூகமாக கொண்டு கட்டுபவராகவும் இருக்கிறார்.

பைலட் பொறுப்பில் மட்டுமே கப்பலை உள் செலுத்துவதும் வெளி கொண்டுவருவதும் நடைமுறை சட்டமாக கடைபிடிக்கப்படுகிறது.   குறிப்பிட்ட தொலைவில் பைலட் பாயிண்ட் என்ற இடம் வரையறை செய்து வைத்து இருக்கும் அதுவரை நமது கப்பலை கொண்டு வந்து காத்திருக்கும் கப்பல் பைலட் என்பவர் சிறிய பைலட் போட்டில் வந்து கப்பல் ஏறி கப்பலை கொண்டு போவதுண்டு.

காற்றையும்,அங்கு உள்ள உள்ளூர் கடல் நீர் ஏற்ற இறக்க அட்டவனைகளையும்,கப்பலின் மிதவை சமன்பாட்டையும்,கப்பலின் முங்கும் அளவின் நிலையையும்,கப்பல் சுற்றளவில் இருக்கும் தண்ணீர்மேல் மட்டத்தின் மேல் பகுதியையும் கவனத்தில் கொண்டு கணக்கில் எடுத்து உதவிக்கு டக் போட் வைத்து கொள்வதுண்டு இதன் மூலம் கப்பலை மெதுவாக தேவைக்கேற்ப இயந்திர சக்தி கொடுத்து கப்பலை துறைமுக வார்ப்பில் கட்டுவார்கள். 


  

Comments

Popular Posts