தரை தள மாணவர்கள்(DECK CADETS)
கப்பலில் பழுதுபார்க்கும் வேலைகள்,கப்பலின் தோற்ற பொலிவை மெருகேற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது.இது ஒரு சரியான அனுபவத்தை தரக்கூடியது.
போசன் என்பவர் கப்பலில் தரை தள பழுது பார்க்கும் பொறுப்பில் இருப்பவர். இவருடன் சேர்ந்து முழு ஒத்துழைப்புடன் தரை தள மாணவர்கள் தங்களது பணியை தொடர வேண்டும்.
கடல் உப்பு காற்றும்,கடலின் அலைகள் கப்பலின் தரை தள பெருவாரியான பகுதிகளை பல நேரங்களில் அலை அடித்து ஈரப்படுத்தி இரும்பு துப்பிடிக்க வைத்துவிடும். இந்த துருப்பிடித்த பகுதிகளை கொத்தி சுரண்டி சுத்தப்படுத்தி பெயிண்ட் அடிக்கும் பணியை Chipping painting சிப்பிங்க் பெயிண்டிங் என்று அழைப்பதுண்டு.
இந்த பணியானது ஒரு தரை தள மாணவனுக்கு மிக முக்கியமான அனுபவம் என்று சொல்லலாம். இவர்கள் அதிகாரிகள் ஆனதும் இந்த chipping painting வேலையில் மாலுமிகள் செய்யும் தவறுகளையும்,அவர்கள் மூலம் இன்னும் அதிக அனுபவங்களையும் பெறலாம்.
கப்பலின் தரை தள தோற்றமானது இந்த பெயிண்டிங் மூலமாகவே நல்ல தோற்ற பொலிவை தரமுடியும்.எனவே தரை தள அதிகாரிகள் இதற்கு அதி முக்கியத்துவம் நிச்சயம் கொடுப்பார்கள்.
இதே போல போசன் என்பவர் மூலமாக அறுந்த கயிறுகளை,வயர் ரோப்களை அறுத்து புதியதாக எப்படி இணைத்து கட்டுவது மற்றும் கயிறுகளை எப்படி கட்டுவது போன்ற கடல் மாலுமிகளின் அனுபவங்களையும் இவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
பல கப்பல்களில் தரை தள மாணவர்கள் 2,3 பேர் இருக்க கூடும் அந்த நேரங்களில் எல்லா நேரமும் போசன் பொறுப்பில் மாணவர்களை சீஃப் ஆபிசர் அனுப்புவதில்லை.மூவரில் ஒருவரை, கப்பலை வெளியே இருந்து எந்நேரமும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவார்கள். அதற்கு கப்பலை முழுவதும் தயார் செய்து கொள்ள சிறிய சிறிய பணிகள் கொடுக்கப்படும்.
இன்னும் கப்பலில் தரை தள பகுதிகளில் பல்வேறு பணியை சார்ந்த விஷயங்கள்,பொருட்கள்,குழாய்கள்,வால்வுகள்
தெரியும் விதமாக அங்கே எழுதப்பட்டிருக்கும்.இந்த எழுத்தானது பெயிண்ட்டால் பிரஷ் கொண்டு எழுதினால் உலக தரத்தில் பார்ப்பதற்கு அழகாக தெரியாது என்பதால் stencil செய்வதுண்டு.
கட்டியான பேப்பரில் ஆங்கில எழுத்துக்களை நகல் எடுத்து உள் பகுதிகளை வெட்டி அதனை சம்பந்தபட்ட இடத்தில் வைத்து பஞ்சு உதவியுடன் பெயிண்ட் தொட்டு உள்வட்டமாக சின்ன அழுத்தம் கொடுத்து சென்றால் எழுத்துக்கள் கிடைக்கும். stencil ஸ்டென்சில் என்பதுண்டு
பல பொருட்கள் அடிக்கடி உபயோகத்தில் பயன்படுத்தி அதன் அருகே அந்த நாட்களை அதில் (sprinkler system tried out 12/04/2015) என்று இப்படி எழுதி வைப்பதுண்டு.இது அடிக்கடி பலவித துறைமுகங்களில் கப்பலை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவதுண்டு அவர்கள் இது போன்ற பகுதிகளை கவனிப்பதுண்டு.இது இன்னும் விலாவரியாக விளக்க வேண்டும்.ஆனால் பொதுவாக புரிந்து கொள்ளும் விதமாக உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய மாணவர்கள் மத்தியில் முன் கோபமும்,பொறுமையின்மையும் அதிகமாக காணப்படுகிறது.கற்றுகொள்ளும் வாய்ப்பினை உதாசீனப்படுத்துகிறார்கள்.இவன் யார் எனக்கு பாடம் சொல்லித்தர என்பது போன்ற ஈகோவும் இவர்கள் மத்தியில் காணப்படுகிறது.இதற்கு காரணம் எனக்கு அனுபவப்படிப்பு முக்கியமல்ல,பரீட்சை எழுத மட்டும் படித்தால் போதும்.அதே நேரம் அதிகாரிகளை காக்கா பிடித்துக்கொண்டால் அவர்கள் அதிகமாக வேலைகள் தரமாட்டார்கள் என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப தங்களை நிலைப்படுத்தி கொள்கிறார்கள்.அதன் பிறகு வேறு யாரையும் கவனம் கொள்வதில்லை.
முந்தைய தரை தள மாணவர்கள் கற்றுகொண்ட வாய்ப்பில் 20% கூட இவர்கள் கற்றுக்கொள்ள முயற்சி கூட செய்வதில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.
இதன் விளைவு இவர்கள் அதிகாரியாக முதன் முதலில் கப்பலில் வேலை செய்ய வரும்போது காப்டன் முதல் கொண்டு சீஃப் ஆபிசர் வரை இவர்கள் மேல் நம்பிக்கையே வைப்பதில்லை.
தரை தள மாணவர்கள் அதிலும் நம் தமிழர்கள் இந்த குறைகளை திருத்தி கொண்டால் என்போன்றவர்கள் இதுபோல குறைகாணும் முறையை திருத்திக்கொள்வோம்.

Comments
Post a Comment