கேஸ் லீக்
ஆனதால் இரண்டு மாலுமிகள் இறப்பு ஒருவர் பாடு காயம்
M.V.FENG HUI HAI என்ற கப்பல் டக் போட்
உதவியால் விபத்துக்குள்ளானவர்களை மாற்றம் செய்து
கரைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
மூன்று
சைனீஸ் மாலுமிகள்,இருவர் இறந்துவிட்டதாகவும்,ஒருவர் கவலைக்கிடமான நிலையில்
இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருக்கிறது இது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல்
இதில் எவ்வாறு கேஸ் லீக் ஆனது என்பதை சரியாக அவர்கள் சொல்லவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்திருக்கிறது.
தற்சமயம்
கப்பல் ஜாம் நகர் நங்கூர பகுதியில் நங்கூரமிட்டு இருக்கிறது.
நீதி:-
பொதுவாக நிலக்கரி கப்பலில் ஏற்றி வந்தாலே கப்பல்
மொத்த தரை தள ஊழியர்களும் அப்பாடா என்று அந்த வாயெஜ் முழுதும் பாடு ரிலாக்ஸ் ஆக இருப்பார்கள்
ஒருவரை தவிர சீஃப் ஆபிசர் என்பவர்தான்.அவர் ஒருவர் மட்டுமே ரொம்பவும் சீரியசாக காட்சியளிப்பார்.காரணம்
இந்த நிலக்கரியானது சரியான காற்று போக்கிகள்(vent) மூலம் கேஸ் ப்ரீ செய்து கொண்டு இருக்கணும்
கேஸ் மானிட்டர் கொண்டு கேஸ் அளவை அளந்து கொண்டு எந்நேரமும் கண்காணிப்பில் வைப்பார்கள்.சமயங்களில்
கடல் நல்ல கொந்தளிப்பில் மாட்டிக்கொள்ளும்போது காற்று போக்கிகளை அடைத்து வைக்கும் சூழல்
அமையும் நேரம் உள்ளே கேஸ் கூடிபோய்விடுவதுண்டு.
சரியான
கேஸ் ஃப்ரீ செய்யாமல் இருக்கும் நேரம் கார்கோ டேங்க் அருகாமையில் இருக்கும் காலியான
டேங்க் உள்ளே மாதாந்திர செக்கப் செய்ய உள்ளே நுழையும் முன்னர் சரியான காற்று உள்ளே
செலுத்தி 0% கேஸ்,மற்றும் காற்றின் அளவு 20.9 வைத்து தெரிவிக்க வேண்டும். .இதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய சொல்லி மானிட்டர்
செய்ய சொல்லி செக் லிஸ்ட் கையொப்பம் இட்டுஅதன் பின்னர்தான் உள்ளே செல்லும் முறையை பின்பற்ற
வேண்டும்.அதிலும் உள்ளே செல்பவர் (EEBD)என்ற குறைந்த நேர அளவில்
நம்மை தற்காத்து கொள்ளும் சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு போக வேண்டும் கேஸ் மானிட்டர்
டிவைஸ் வைத்திருக்க வேண்டும்.தொலை தொடர்பு அவசியம் வேண்டும்.
இது போன்ற
முன்னெச்செரிக்கைகள் செய்யாது எல்லாற்றையும் உதாசீனப்படுத்தி பல கப்பல்களில் ஏனோதானோ
நடவடிக்கைகள் பெயருக்கு நடப்பதுண்டு.வேலை என்பது உள்ளே போய்விட்டு வருவது 15 நிமிடம்
என்றால் இதை தயார் செய்யும் முறை ஒன்றரை தினம் ஆகிபோவதுண்டு.இந்த அசால்ட்டான செயல்களால்தான்
இந்த சம்பங்கள் நடை பெறுகிறது.
என்வே
எல்லோருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும்.எல்லோரும் அவரவர் கடமையை சரிவர செய்தால் இழப்பு
குறையும்.



Comments
Post a Comment