கப்பலில் வெயிலை எதிர்கொள்வோம்
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்த வருடமும் சற்று கூடுதலாக ஆரம்பமே அதிரடி ஆட்டம் செய்கிறது
கப்பலில் இந்த வெயிலின் கொடுமையை அதிகாரிகள் உணர்வார்களா? அல்லது
நிறுவனங்கள்தான் இந்த சீசனில் வேலைப்பழுவை குறைத்து கொள்வார்களா?
கப்பல் நிறுவனங்கள் இப்போதெல்லாம் தங்களுடைய நிறுவனஒப்பந்தத்தின் அடியில் எத்தனை கப்பல்கள் இயங்குகிறதோ அத்தனைக்கும் இடையில் பள்ளி குழந்தைகளுக்கு மத்தியில் போட்டி போட வைப்பது போல இங்கே மாதம் தோரும் கப்பல்களுக்கு மத்தியில் டாஸ்க் கொடுத்துவிடுகிறார்கள் இதனால் உயர் அதிகாரிகள் சர்வ சதா காலமும் டாஸ்க் நினைப்பிலேயே ஊழியர்களை வதைத்து விடுவதுண்டு.இதில் பருவ கால மாற்றங்களை உணர்ந்து வேலை வாங்குவது மனிதாபிமான செயலாகும்.
குறிப்பாக வெயில் காலங்களில் வேலை நேர அளவுகளை குறைக்கலாம்,அல்லது
முடிந்தவரை வெயிலின் உக்கிரம் கூடும் முன்னர் கனமான வேலைகளை,முக்கியமாக கருதப்படும் வேலைகளை அதிகாலையிலேயே தொடங்கி முடிப்பதும் அதிகாரிகளை ஊழியர்கள் மத்தியில் மரியாதை மேலெழும்ப வைக்கும்
எந்திர அறைக்குள் கண்ட்ரோல் அறைக்குள் ஏசி செய்திருப்பார்கள் அதனால் பல ஊழியர்கள் இயந்திர பொறியாளர்களோடு நல்ல உறவில் இருந்துகொண்டு அவ்வப்போது கண்ட்ரோல் அறைக்குள் தஞ்சம் அடைவார்கள்.ஆனால் பல உயர் பொறியாளர்கள் இதை அனுமதிப்பதில்லை.இது போன்ற நேரங்களில் ஊழியர்கள் உடல் உஷ்ண நோய்களுக்கு ஆளாகிறார்கள்
தவிர நிறைய கப்பல்களில் ஊழியர்கள் பகலில் இதுபோல் இயந்திர பொறியாளர்களோடு நல்ல உறவில் கண்ட்ரோல் அறைக்குள் அடிக்கடி உள்ளே போவதால்,இருப்பதால் வேலை சுத்தமாக நடை பெறுவதில்லை.இதனால் உயர் பொறியாளர் ஊழியர்களை தேவையில்லாத தொந்தரவுகள் கொடுப்பதுண்டு.போர்டு நிறைய வேலைகள் எழுதி வைத்துவிட்டு போவதுண்டு.
அதுவும் இரவு பல கப்பல்களில் இது போன்ற பிரச்னைகளால் இரவில் (இரவில் அரை மணிக்கொருமுறை கீழே சென்று ரீடிங்க் மற்றும் ஓடிக்கொண்டு இருக்கும் எந்திரங்களை கண்காணிக்க மட்டும் )கண்ட்ரோல் அறைக்குள் இருந்து கொண்டு கவனித்துக்கொண்டு இருக்கும் வேலைக்கு பதிலாக வேலைகள் கொடுப்பதுண்டு,இதனால் பகலிலும் வேலை இரவிலும் வேலை,அதுவும் மினிமம் நபர்களே இருந்து கண்காணிக்கும் வேலையில் இதுபோல் வேலைகள் கொடுப்பதால் ஊழியருக்கு பாதுகாப்பில்லாத நிலைமைதான் ஏற்படுகிறது.
இனி,சூட்டால் ஏற்படும் நோயானது கப்பலில் அடிக்கடி காணப்படும் ஒன்று.இதை பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.இதை கவனிக்க தவறினால் மரணம் வரை கூட சிலருக்கு நடந்தேறிய அனுபவங்களும் உண்டு.
வெப்பத்தினால் ஏற்படும் சோர்வானது மெதுவாக கொல்லும் விஷம் போன்றதுதான்.இதில் உடலிலிருந்து உப்பும் நீரும் அதிக அளவில் வியர்வையாக வெளியேறுவது அறிகுறிகள் எனலாம்.
இது போன்ற பாதிப்பில் இருப்பவர்களுக்கு வாந்தியும்,வயிற்று போக்கும் காணப்படலாம்
இதில் பின் விளைவாக சிலருக்கு தலைவலி,உடல்சோர்வு,பசியின்மை குமட்டல் அதிக வியர்வை,தோலின் நிறம் மாறி போதல் தொடை இடுக்கில் புண்கள் என்று வருவதை வைத்து விழிப்பாக இருப்பது நல்லதும் கூட.
பொதுவாக உடலிலிருந்து வியர்வை வெறியேறுவது உடலின் நல்ல மெக்கானிசம் எனலாம் ஆனால் வெளியேறும் நீருக்கும் உப்புக்கும் மாற்று முறைகளும் தேவைப்படுகிறது உடலுக்கு.உப்பு மாத்திரைகள் உணவு உண்ணும் மேஜையில் கப்பலில் வைத்து விடுவார்கள் நாம் பருகும் நீரிலோ,பானங்களிலோ கலந்து உட்கொள்வது நல்லதும் கூட. அதே போல தண்ணீரின் அளவு நமது உடலானது எவ்வளவு கேட்கிறதோ அவ்வளவு அருந்துதல் நல்லது.
அதிக தேவை இல்லாத நீரானது சிறு நீரக பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
தவிர உணவு பழக்கவழக்கங்கள் மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது.அதிக பழங்கள் கொடுக்க சொல்லி கப்பல் செஃப்பிடம் வலியுறுத்தலாம்.
பகல் பொழுதில் கோழி உணவுகளை தவிர்க்கலாம்,அல்லது வாரம் இருமுறை மட்டுமே அவைகளை எடுத்துக்கொள்ளலாம்.
நாம் பயணம் செய்ய போகின்ற நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கு தகுந்தவாறு மாளிகை பொருட்களும்,இதர பழவகைகளும் வாங்கி கொள்ளலாம்.தவிர கரைக்கு போகும் நபரிடமோ அல்லது நேரடியாக போயோ நமக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி வைத்து கொள்ளலாம்.
கப்பலில் குறிப்பிட்ட பல இடங்களில் வெப்ப நிலை அதிகமாகவே காணப்படும் குறிப்பாக இயந்திர அறை,மற்றும் மாதாந்திர விசிட் செய்யும் மூடிய பகுதிகளை தகுந்த காற்று வசதிகள் விஷவாயுக்கள் இல்லாத இடமாக உறுதி செய்த பின்னர் எச்சரிக்கையாக உள்ளே செல்வது சால சிறந்தது எனலாம்.
மேலும் இயந்திர அறைக்கு மேலே வெளிப்புறமாக வடிவமைக்க்ப்பட்டுள்ள ஸ்கைலைட் என்ற இயற்கையாக காற்று உள்ளே புகும் அடைப்பானை கடல் சீற்றம் இல்லாத காலங்களில் திறந்தே வைப்பது நல்லது.
தரை தள ஊழியர்கள் சரக்கு கப்பல்களில் கிரேன் வயர்களை சில மாதங்களுக்கு ஒருமுறை கிரீஸ் செய்வதுண்டு இது கொஞ்சம் வெயில் காலத்தில் சற்று கோபத்தையும், எதுக்குடா இந்த வேலை இப்ப வருது என்ற கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். தவிர தரை தளத்தில் துருக்களை கொத்தி பெயிண்ட் அடிக்கும் பணிகளும் வெயிலின் உஷ்ணத்தால் தகதகவென கொதிக்கும் நேரம் அவஸ்தையாக தோன்றும்
இதுபோன்ற நேரங்கள் அதிகாலையிலேயே தரை தளத்துக்கு வந்து பணிகளை சீக்கிரம் முடிக்க சொல்லி உயர் அதிகாரியிடம் வலியுறுத்தலாம்.
வெயிலின் உக்கிரம் கூடியுள்ள இந்த வருடம் வளைகுடா பகுதியில் இயங்கி கொண்டு இருக்கும் கப்பல் நிர்வாகம் இதை கருத்தில் எடுக்குமா என்பது கேள்விதான் இப்போதைய சட்டங்கள் கடுமையாக இருப்பதால் ஓரளவு அங்கும் மாற்றங்கள் இருக்கலாம், .அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் மாதம் தோரும் நடக்கும் மீட்டிங்கில் நமது குறைகளை வலியுறுத்தி போராடுவது நமக்கு நல்லது.
வளைகுடா நாடுகள் மட்டுமல்ல பல ஆப்பிரிக்க நாடுகள்,தென் அமெரிக்கா நாடுகள்,இந்தியா என்று பலதரப்பட்ட நாடுகளை நாம் வலம் வந்து எதிர்நோக்கும் வல்லமையை,திண்ணத்தை நமக்கு நாமே முன்னெச்செரிக்கையாக உருவகித்து கொள்வது நமது ஆயுளில் கொஞ்சம் நீட்டிக்கலாம் என்பது சமயோசிதம்.

Comments
Post a Comment