இளைஞனின் எதிர்காலம் 

எந்த துறையை ,படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பங்கள் இனி இரண்டு மாதமும் பதின் பருவ வயது யோசிக்க ஆரம்பிக்கும் இந்த நேரம்.....

கப்பல் துறையும் ப ட்டுக்கம்பளம் காட்டி வரவேற்கும் இளைஞர்களை.

கப்பல் வாழ்க்கை நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்தது
எதை எதையோ அடைய தேட தொடர தொட்டுவிட மனசுக்குள் ஆயிரம் கனவுகளோடு கப்பல் வாழ்க்கையை  பின் தொடர புதியவர்கள் காலடி எடுத்து வைக்கும் போது  பெரிய வியப்பையும் ஆச்சரியத்தையும் வேதனை கலந்த அனுபவமாயும் பார்க்க தோன்றும்.

அனுபவங்கள் தந்த பாடம் நாம் புதியவர்களை வரவேற்காமல் கொஞ்சம் சீண்டும்  விதமாக ஏளனமாக நையாண்டி செய்ய தூண்டும்.ஆனாலும் எதிர்காலம் அவர்களை நோக்கியே கை  தட்டி அழைக்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு வழி விட்டு வரவேற்க  பழகுவோம்

பல காலமாக வட இந்திய இளைஞர்கள் வெகு ஆர்வமாக கப்பல் வாழ்க்கைக்கு வருவதன் பின்னணி கை நிறைய பணம், மனம் நிறைய சாதிக்கணும் என்ற ஆர்வமும் அதீத நம்பிக்கையும் கடலையே பார்க்காத அவர்கள் நம்மை விட அதிக அளவில் அதிக எண்ணிக்கையில்  இருப்பது  நம்மை பல கோணங்களில்  ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வது நல்லது.  

ஆனால்,இன்று நம்மவர்கள் கப்பல் வாழ்க்கைக்குள் வர ஆர்வம் காட்டுகின்றனர்,மகிழ்ச்சியளிக்க கூடிய ஒன்று, வரவேற்கத்தக்கது,நம்மவர்களும் கடலை அறியாதவர்கள் பலர் ஆர்வம் காட்டிவருகிறார்கள்

இருப்பினும்,  எந்தளவு நம்மவர்கள் வட இந்தியர்களோடு  ஒத்துப்போவதும் இணங்கி போவதும் நல்லவிதமாக பழகுவதும்  இதை பொறுத்துதான்  நாம் அங்கே ஜெயிக்கலாம்,தொடர் ஓட்டம் ஓடலாம்

இன்றைய நம்மவர்களின் போராட்ட களம்  அங்கே செல்லாது,சோசியல் எண்ணங்கள் நமக்குள்ளாக மட்டுமே வைத்துக்கொள்வது பெரிய பலனை தரும்.சுய நலம் மட்டுமே நம்மை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பதை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும்.

இனி பல கப்பல் இளைஞர்கள் முதல் முறையாக கடலுக்குள் மிக நீண்ட கால வீட்டுப்பிரிவில் வருவது அவர்களை எவ்வாறு சுயமாக அவ்வப்போது மனதை கப்பல் வாழ்க்கைக்கு தோதாக மாற்றுவது என்பது கஷ்டம்தான்.
கொஞ்சம் பெரிதாகவே அவர்களை குழப்பி வெறுமையின் முடிவில் சபல மனதுக்கு மயங்கி போவது வேதனைதான்.


இந்த வெறுமைதான் பல இளைஞர் வாழ்வில் திருப்பங்களை கொண்டு வந்துவிடுகிறது.மது,புகை போதை, மாது என்று தவறான பாதையில் பழையவர்களோடு சேர்ந்து பயணிக்க வைத்துவிடும் இங்கே இவர்களை கண்டிக்க,கடிந்து கொள்ள வீட்டு சொந்தங்கள் இல்லை என்ற துணிச்சல் மனதினுள் எழுவதால்.

கப்பல் என்றாலே புதிய இளைஞர்கள் எண்ணங்களில் இது போன்ற ருசிமிக்க (!?) அனுபவங்களே மறைமுகமாக பலரை இந்த வாழ்க்கைக்குள் வர தூண்டுகிறது என்றால் கொஞ்சம் கூட தயங்காமல் தலையசைத்து ஆமோதிக்கலாம்.

தவிர கை  நிறைய சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையும்தான்,ஆனால் பல  இளைஞர்களுக்கு கப்பலை விட இன்றெல்லாம் மற்ற துறைகளில் அதிகமாக வருமானம் வருகிறது என்பது தெரியாமல், தேட சோம்பேறித்து சரி இதுல போயிரலாம் என்று பலர் தவறாக உள்ளே நுழைந்து விடுகிறார்கள்.

அதிலும் நம்மவர்கள் அதிகாரிகளாகவோ,அல்லது இயந்திர பொறியாளராகவோ போக வேண்டுமென்றால் பெரிய யோஜனை தருகிறார்கள்.காரணம் படிப்பு,தாழ்வு மனப்பான்மை,தன்னம்பிக்கை இல்லாமை,மொழி புரியாமை என காரணங்கள் அடுக்கி கொண்டே செல்லலாம்.

வட இந்தியர்களும் அடிப்படை ஆங்கில அறிவே இல்லாமல்தான் இங்கே நுழைவதுண்டு,ஆனால் இந்தி மொழி தாய்  மொழியாக இருக்கிற காரணத்தால் வெகு சகஜமாக உலா வருவார்கள்.

நம்மவர்கள் எப்போதும் பய உணர்ச்சியிலேயே முதல் கப்பல் அனுபவங்களை பெறுகிறார்கள்.அதற்குள் வட இந்திய இளைஞர்கள் பல படிகள் மேலே சென்றுவிடுகிறார்கள்.

இன்று பல கப்பல் துறை சார்ந்த பயிற்சி பல்கலைக்கழகங்கள் உங்கள்  வீட்டுக்கருகாமை  வரை வந்துவிட்டார்கள். அவர்கள் பிழைக்கத்தான்,ஆனாலும் நாம் நமது வாழ்க்கையை எவ்விதம் வடிவமைப்பது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

கப்பல்தான் வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்தே உள் நுழைவது உசிதம் பாத்ரூம் கழுவியதும்,கப்பலை சுத்தம் செய்ததும்,இயந்திரங்களை துடைத்ததும் பழையவர்களோடு போகட்டும். 

  அழுக்கு  படாத வெள்ளை சீருடையும்,மிடுக்காக அலையும்  பொறியாளராகவும் மட்டுமே வலம் வர வேண்டும் என்ற எண்ணங்களை புடம் போடுங்கள்.
எதிர்காலத்தை ஆழமாக அலசி ஆராய்ந்து கப்பல் துறையை தேர்ந்தெடுங்கள்.
பத்தோடு பதினொன்றாக உள்ளே நுழைவது உங்கள் பெற்றோரின் வருவாய் ஆதாரத்தை ஆடி அசைத்து சாய்த்து விடும் அபாயம் இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.









 

Comments

Popular Posts