கார்கோ கப்பல் பிரிட்ஜ் அடியில் சிக்கி கொண்டது
வியட்நாம்
நாட்டில் ஹோ சி மின் வடகிழக்கில் டோங்க் நாய் ஆற்றில் உள்ள பிரிட்ஜ் அருகில் ஜெனரல்கார்கோ M.V.ROYAL 09 கப்பல் ஒன்று குறைந்த கேபிளில் நங்கூரம் பாய்ச்சிய
நிலையில் இருந்திருக்கிறது எதிர்பாராவிதமாக உயர் கடல் மட்டத்தின்போது கப்பலானது இழுத்துக்கொண்டு
(டிராக்) வந்து பிரிட்ஜ் உள்ளே மாட்டிக்கொண்டது
3டக்
வைத்து பாலமணி நேர போராட்டத்திற்கு பிறகு கப்பலை வெளியே இழுத்து
எடுத்திருக்கிறார்கள் கப்பலின் பின் பகுதியானது மாட்டிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
பிரிட்ஜ்க்கு
சிறிதான சேதங்கள் தவிர பெரிதாக எந்த வித சேதமும் நிகழவில்லை,யாருக்கும் எந்தவித காயமோ
உயிர் சேதமோ நிகழ வில்லை,பிரிட்ஜில் வழக்கம்போல டிராஃபிக்கானதுசெயல் பட்டுள்ளது
பலமணிநேரம் கழித்து.
வழக்கம்போல
இங்கேயும் அதிகாரிகளின் அலட்சியம், உதாசீனம்தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
ஒருவேளை
இப்படியும் கருத்தில் கொள்ளலாம்
நங்கூர
கண்காணிப்பில் இருக்கும் அதிகாரியின் அலட்சியத்தால் நிகழ வாய்ப்பிருக்கிறது,அல்லது நங்கூரம் பிரிட்ஜ்
வெகு அருகாமையில், போடப்பட்டு இருக்கலாம்,
உயர் கடல் மட்ட அலைகள் உருவான நேரம் சில ஆறுகளில் நீரோட்டம் அதிகரிக்கும் அந்த
நேரத்திலும் நடந்திருக்கலாம் அல்லது குறைவான நேரத்தில் துறைமுக அழைப்பிற்காக காத்திருந்த
நேரத்தில் தவறு நேர்ந்திருக்கலாம்
ஆனால்
எது எப்படியோ இது போன்ற நேரத்தில் மெயின் இயந்திரத்தை அணைக்காமல் ஸ்டேண்ட் பை மோடில்
இயந்திரத்தை வைத்து இருந்தால் அசம்பாவீதம் தடுக்கப்பட்டிருக்கும்.




Comments
Post a Comment